பௌர்ணமி நிலவில் அவளைக் கண்டேன்
அழகினால் நிலவைக் கொன்றாள்
நான் அவள் அழகை
என் மனதில் பதிவு செய்யும் முன்
என் கண்களில் கரைந்து சென்றாள்
மொட்டாய் இருந்த நான் மலர்ந்தேன்
காதல் தேசத்தில் வீழ்ந்தேன்
அழகை வர்ணிக்க வார்த்தையில்லை
ஆனாலும் வர்ணிக்கிறேன்
மோகத்தில் பிரம்மனும்
மேகத்தில் செதுக்கிய சிற்பம்தான்
அவள் கூந்தலோ !
அவள் கூந்தலைப் பார்த்து
மேகங்கள் அழுக்காறு கொள்ளும்
அவள் முகம் பார்த்து
தாமரை சிந்தும் கண்ணீர்
இலைகளில்
கயல் துள்ளும் குளங்கள்
அவள் கண்களை யாசிக்கும்
வரிசையாய் கைகோர்த்து நிற்கும்
மல்லிகை மொட்டுக்கள்
தங்கச் சிலையை
தவிக்க வைக்கும் மேனி
பஞ்சை மிஞ்சும் இதயம்
.jpg)
No comments:
Post a Comment