Thursday, March 3, 2011



மகாத்மாவின் வெற்றி இரகசியங்கள் 
*********************************************

1. முடிவெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.உங்கள் ஒருவருக்காகமட்டுமில்லை எல்லோருக்காகவும். நீங்கள் எடுக்கும் ஒரு முடிவினால் வேறுயாராவது
  பாதிக்கப் படுவர்களா என்று யோசித்துப் பழகுங்கள்.
**********

2. நன்றாக யோசித்து ஒரு செயலில் இறங்க வேண்டும். ஆனால் அப்படி
  இறங்கியபிறகு  சலனங்கள் கூடாது. பலன்களை எண்ணிக்                 
   கவலைப்படகூடாது.
************

3.ஒத்துழையாமை என்பது அற்புதமான ஆயுதம் நமக்குப் பிடிக்காதவர்கள் மீது  கல் எடுத்து வீசுவதைவிட அவர்களைப் புறக்கணித்துப் பாருகள். தானாக உங்கள் வழிக்கு இறங்கி வருவார்கள்.
***************

4. உங்களுடைய  நண்பன் அல்லது உறவினர் அல்லது உங்களுக்கு பிடித்தவர்என்பதற்காக சிலருக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தந்து பழகாதீர்கள். எல்லோருக்கும் சம அளவு வாய்ப்புக் கொடுங்கள்.
*****************

5. பள்ளி, கல்லுரிக்குச் சென்று திரும்புவதோடு படிப்பு நின்றுவிடுவதில்லை. எப்போதும் மாணவராகவே இருங்கள்.புதுப்புது விசயங்களைக் கற்றுகொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்.
*********************
உலக உண்மை 
--------------------------------------- 

மனிதன் சிரிக்கின்ற

நிமிடங்கள் பொய்யாக

இருகலாம் - ஆனால் 

அவன் அழுகின்ற

நிமிடங்கள் 

நிஜமானவை !!....